சீனி சோறு
0
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு டம்ளர்
தேங்காய்பால் - 2 1/4 டம்ளர்
சீனி - 1 1/4 டம்ளர்
தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை - சிறுத்துண்டு
முந்திரி பருப்பு - 30 எண்ணிக்கை
பூண்டு விழுது - ஒரு கொட்டை பாக்கு அளவு
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச் இஞ்சி
செய்முறை:
அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை, முந்திரி போட்டு தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்பால், உப்பு, அரிசி போட்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பிறகு 4 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
சாதம் வெந்ததும் சீனி, நெய் சேர்த்து கிளறி வைக்கவும். 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.