சில்லி மெக்ஸிகன் ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிராக வேகவைத்த சாதம் - 2 கப்

நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

நீளமாக நறுக்கிய சிவப்பு கோஸ் - அரை கப்

நீளமாக நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் - கால் கப்

நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் - கால் கப்

நீளமாக நறுக்கிய கேரட் - கால் கப்

வேகவைத்த ராஜ்மா - அரை கப்

நசுக்கிய பூண்டு - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிதளவு

எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் வற்றலை மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் பூண்டை போட்டு வதக்கி பின் கேரட்டை போட்டு வதக்கவும்.

கேரட் லேசாக வதங்கியதும் கோஸை போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய், உப்பு, பொடித்த மிளகாய்வற்றல், மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.

பின் தக்காளி சாஸ், சோயா சாஸ், வேகவைத்த ராஜ்மாவை போட்டு வதக்கவும்.

பின் வேகவைத்த சாதத்தை போட்டு கிளறி இறக்கவும். கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: