சில்லி மெக்ஸிகன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வேகவைத்த சாதம் - 2 கப்

நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

நீளமாக நறுக்கிய கோஸ் - அரை கப்

நீளமாக நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் - கால் கப்

நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் - கால் கப்

நீளமாக நறுக்கிய கேரட் - கால் கப்

நசுக்கிய பூண்டு - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகாய் வற்றலை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் பூண்டைச் சேர்த்து வதக்கி

பிறகு கேரட்டைச் சேர்த்து வதக்கவும். கேரட் லேசாக வதங்கியதும் கோஸைச் சேர்த்து வதக்கி பிறகு குடைமிளகாய், உப்பு, பொடித்த மிளகாய் வற்றல் மற்றும் மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.

அத்துடன் தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் போட்டு வதக்கவும். பிறகு வேக வைத்த சாதத்தைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

கொத்தமல்லித் தழை தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.