சிம்பிள் ப்ரைட் ரைஸ்(உணவகங்களில் செய்யும் முறை)
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் - ஒரு கப்
காரட், பீன்ஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - கால் கப்
கோஸ் - கால் கப்
சைனீஸ் சால்ட் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
பச்சை மிளகாய் - ஏழு நம்பர்
வெள்ளை மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட் மற்றும் பீன்ஸை நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை லேசாக இடித்துக் கொள்ளவும்.
மிளகை ஒன்றும் பாதியுமாக பொடி செய்து கொள்ளவும்.
கோஸை மிக மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை காய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு இடித்த பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும்.
மிளகுத் தூள் மற்றும் சைனீஸ் சால்ட் சேர்த்து ஒரு தரம் பிரட்டி சாதத்தில் கொட்டி கிளறவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதற்கு பக்க உணவாக கோபி மஞ்சுரியன், பாலக் பனீர், பனீர் குருமா, ஆலு பாலக், ஆந்திரா தக்காளி தொக்கு நன்றாக இருக்கும்.