சிம்பிள் தேங்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

நெய் - 1 டீஸ்பூன்

துருவிய தேங்காய் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 2, 3

கறிவேப்பிலை. - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை,அல்லது முந்திரி பருப்பு, சீரகம், பெருங்காயம்.- தாளிக்க

செய்முறை:

அரிசியை அளவாகத் தண்ணீர் வைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் மேலும் ஒட்டாமல் இருக்கும்.

வாணலியில் தேங்காய் எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, நிலக்கடலை,அல்லது முந்திரி பருப்பு, சீரகம், பெருங்காயம்,கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

துருவிய தேங்காயையும் சேர்த்து லேசாக இளம் சிவப்பாகும் வரை வதக்கி, சாதத்தில் கொட்டி தேவையான உப்பும் சேர்த்து, சாதம் உடையாமல் கலக்கவும்.

குறிப்புகள்: