சிம்பிள் கொத்தமல்லி சாதம்
0
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் - 4 கப்
நறுக்கி அலசிய கொத்தமல்லி - 2 கப்
புளி - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
எண்ணையைக் காய வைத்து, கடுகு தாளித்து, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
ஆறிய பின் கொத்தமல்லி, உப்பு, புளி சேர்த்து சற்றுக் கரகரப்பாக அரைக்கவும்.
சூடான சாதத்தைத் தட்டில் பரத்தி, அரைத்து வைத்ததைப்போட்டுக் கிளறவும்.
குறிப்புகள்:
வேண்டுமானால் சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கலாம்