சிம்பிள் கறிவேப்பிலை சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 4 கப்

நறுக்கி அலசிய கறிவேப்பிலை - 2 கப்

புளி - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

எண்ணையைக் காய வைத்து, கடுகு தாளித்து, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

அடுப்பை அணைத்து விட்டு

ஆறிய பின் கறிவேப்பிலை, உப்பு, புளி சேர்த்து சற்றுக் கரகரப்பாக அரைக்கவும்.

சூடான சாதத்தைத் தட்டில் பரத்தி, அரைத்து வைத்ததைப்போட்டுக் கிளறவும்.

குறிப்புகள்:

வேண்டுமானால் சிறிது நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து சேர்க்கலாம்