சிக்கன் ப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

-------------------------------

சாதம் தயாரிக்க:

------------------------------------

பாசுமதி அரிசி - ஒன்றரை டம்ளர்

சோயா சாஸ் - ஒரு டிராப்

வெங்காயம் - கால் பாகம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி

மேகி கியுப் - கால்

பட்டர் - இரண்டு தேக்கரண்டி

-------------------------------

தாளிக்க:

--------------------------------

எண்ணெயும் பட்டரும் - இரண்டு தேக்கரண்டி

சர்க்கரை - கால் தேக்கரண்டி

பூண்டு - மூன்று பல் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - ஒன்று (நடுவில் கீறி விதை எடுத்து பொடியாக அரிந்தது)

------------------------------------

வதக்கி கொள்ள:

-------------------------------------

எலுபில்லாத சிக்கன் - அரை கப் (பொடியாக நறுக்கியது)

கேபேஜ் - கால் கப்

கேரட் - கால் கப்

வெங்காய தாள் - கால் கப்

பீன்ஸ் - இரண்டு மேசைக்கரண்டி

கேப்ஸிகம் - ஒரு மேசைக்கரண்டி

கார்ன் - ஒரு மேசைக்கரண்டி

பச்ச பட்டாணி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அரிசியை அரை மணி நேரம் முன்பே ஊற வைக்கவும்.

அதற்குள் மற்றதை ரெடி பண்ணவும்.

சிக்கனை கழுவி பொடியாக நறுக்கி பட்டர், பெப்பர், சால்ட் போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அனைத்து காய்களையும் போட்டு வேக வைக்க வேண்டாம் அரை வேக்காடாக வதக்கினால் போதும்.

சிக்கனையும் சேர்த்து விடுங்கள்.

இப்போது ரைஸ் குக்கர் அல்லது குக்கரில் நல்லெண்ணெய் பட்டர் கலவையை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு, மேகி கியூப் போட்டு லேசாக வதக்கி சிவக்க வேண்டாம். சோயாசாஸ் சேர்த்து அரிசியும் போட்டு வதக்கி ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை டம்ளறே ஊற்ற வேண்டும்.

குக்கரில் இரண்டாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் உடனே உதிர்த்து எடுத்து விட வேன்டும்.

எலக்ட்ரிக் குக்கர் என்றால் கீப்பில் வைத்து கொஞ்ச நேரத்தில் இறக்கி உதிர்த்து கொள்ளுங்கள்.

இப்போது முதல் கலக்கிய கலவையில் வெந்த சாதத்தை கலந்து மீண்டும் ஒரு முறை இரண்டு நிமிடத்திற்கு அடுப்பில் வைத்து நன்கு கிளறி இறக்கவும். கடைசியில் லெமென் ஜூஸ் அரை முடி, பெப்பர் அரை தேக்கரண்டி, உப்பு தேவைக்கு சேர்த்து கிளறி கொள்ளவும்.

இதில் முட்டை சேர்க்கவில்லை தேவைப்படுபவர்கள் மூன்று முட்டை, பெப்பர், சால்ட் போட்டு கலக்கி சுட்டு எடுத்து நல்ல கொத்தி அதில் சேர்த்து கலக்கவும்.

குறிப்புகள்:

இதற்கு தொட்டு கொள்ள காலிப்ளவர் 65 (அ) பெப்பர் சிக்கன்.