சிக்கன் ப்ரைடு ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

கோழி இறைச்சி - அரை கப் (நறுக்கின துண்டங்கள்)

முட்டை - ஒன்று

குடை மிளகாய் - கால் கப் (நறுக்கியது)

பெரிய வெங்காயம் - ஒன்று

கேரட் - ஒன்று (சிறியது)

முட்டைகோஸ் - சிறிது

வெங்காயத்தாள் - சிறிது

இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி

பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி

அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று உதிரும் பக்குவத்திற்கு வடித்துக் கொள்ளவும்.

குக்கரில் அரிசி வேக வைக்கும்போதே ஒரு தேக்கரண்டி எண்ணெய்யும், இரண்டு மூன்று சொட்டுகள் எலுமிச்சை சாறும் சேர்த்து வேக வைத்தால் சாதம் குழையாமல், வெண்மையாக இருக்கும்.

கோழி இறைச்சியினை எலும்புகள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து கொண்டு, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஆவியில் வேக வைத்தும் எடுக்கலாம். இல்லையெனில் எண்ணெய்யில் இலேசாகப் பொரித்தும் எடுத்துக் கொள்ளலாம்.

விரும்பினால் சிறிது மசாலாப் பொடி கலந்தோ அல்லது சோயா சாஸில் பிரட்டி எடுத்தோ பொரித்து கொள்ளலாம்.

வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

முட்டையை உடைத்து ஊற்றி தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டையைக் கிளறி பொரியல் போன்று வேக வைத்து எடுக்கவும்.

அதே போல் நறுக்கின காய்கறிகளையும் தனியே இலேசாக வதக்கிக் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு கட்டாயமில்லை.

இப்போது சாதம், கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வறுக்கவும்.

சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ, உப்பு சேர்த்து தீயை சற்று அதிகப்படுத்தி சிறிது நேரம் கிளறியபடி வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

குறிப்புகள்: