சிக்கன் ப்ரைடு ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒன்றரை கப்

வெங்காயம் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - கால் தேக்கரண்டி

பட்டர் - 5 தேக்கரண்டி

சோயா சாஸ் - அரை தேக்கரண்டி

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - அரை கப்

வெங்காய தாள் - ஒரு குச்சி

கோஸ் - கால் கப்

கேரட் - கால் கப்

பீன்ஸ் - கால் கப்

குடை மிளகாய் - ஒரு மேசைக்கரண்டி

பச்சை பட்டாணி - ஒரு மேசைக்கரண்டி

கார்ன் - ஒரு மேசைக்கரண்டி

வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

பூண்டு - மூன்று பல்

பச்சை மிளகாய் - ஒன்று

முட்டை - ஒன்று

கறுப்பு மிளகு தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

வெங்காயம், கோஸ், கேரட்,குடை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

ரைஸ் குக்கரில் (அல்லது ப்ரஷர் குக்கரில்) பட்டரை போட்டு உருக்கி கொள்ளவும்.

அதில் சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு சிவக்கவிடவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து வதக்கவும்.

பின்னர் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து அதில் சேர்க்கவும்.

அதில் சோயா சாஸ் கால் தேக்கரண்டி ஊற்றி, உப்பு சேர்த்து கிளறிவிடவும். ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சாதமாக வடித்து எடுத்து கிளறிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.

இப்போது வாணலியில் சிறிது பட்டர் விட்டு உருக்கி கொள்ளவும். அடுத்து அதில் சர்க்கரை, நறுக்கின பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.

சிக்கன் வெந்ததும், கோஸ், காரட், கார்ன், பட்டாணி, வெங்காயத்தாள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். காய்களை நன்றாக வேகவிட வேண்டாம். பாதி வேக்காடு இருந்தால் போதுமானது. பின்னர் அதில் வெள்ளை மிளகுத்தூள்

உப்பு, சோயாசாஸ் சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.

முட்டையை உடைத்து ஊற்றி அடித்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி தோசை போல் ஊற்றி வேக வைக்கவும். பின்னர் அதை தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

உதிர்த்த முட்டையை வேக வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். அதேபோல் வேக வைத்து எடுத்துள்ள சிக்கன் காய்கறி கலவையையும் சாதத்தில் கொட்டி கிளறவும்.

தேவைப்பட்டால் சிறிது உப்பு, மிளகுத்தூள் மற்றும் சிறிது பட்டர் ஊற்றி கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை டொமெட்டோ கெட்ச் அப், சிக்கன் ஃப்ரை உடன் சேர்த்து பரிமாறலாம்.