சிக்கன் புலாவ்
தேவையான பொருட்கள்:
கோழி - கால் கிலோ
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பிரியாணி அரிசி - 2 ஆழாக்கு
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
முந்திரி - 50 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து அரைவேக்காடாக வேக வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும். கோழியை மிகப்பொடியதாக நறுக்கி 1/2 கிளாஸ் தண்ணீரில் வேகவிடவும்.
நன்கு வெந்ததும் மிளகாய்ப்பொடி, மிளகு சீரகப்பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றுடன் தயிர் கலந்து சிறிது எண்ணெய் விட்டு வேகவிடவும்.
வேறு கடாயில் அரை தேக்கரண்டி நெய் விட்டு திராட்சை, முந்திரியை வறுக்கவும்.
பின் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
பின் சிக்கன் மசாலாவை கொட்டி சிறு தீயில் கிளறி சாதத்தை கொட்டி உடையாமல் கிளறி வறுத்த முந்திரி, திராச்சை போட்டு எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கவும்.
பட்டாணியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்து கடைசியாக புலாவில் கொட்டவும்.