சிக்கன் ஒயிட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 3 கப்

சிக்கன் - 250 கிராம்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 5

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

புதினா, மல்லி இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கருவேப்பிலை - சிறிதளவு

-------------------------------------

தாளிக்க

----------------------------------------------

பட்டை, ஏலம், லவங்கம் - தலா 3

அன்னாசிப்பூ. பிரிஞ்சி இலை - சிறிதளவு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். சிக்கனை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய்ப்பால், இஞ்சி, பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்கவும்.

பின்னர் அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இப்போது பொடியாக நறுக்கிய சிக்கனை போட்டு தண்ணீர் பிரிந்து வற்றும் வரை வதக்கவும்.

சிக்கன் நிறம் மாறும் போது உப்பு சேர்க்கவும். பின்னர் மல்லி, புதினாவை சேர்க்கவும்., அதன்பிறகு தேங்காய்ப்பாலுடன் 3 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியையும் சேர்த்து மீதி இருக்கும் உப்பையும் சேர்க்கவும்.

வாணலியில் உள்ளதை ப்ரஷர் குக்கர் அல்லது ரைஸ் குக்கருக்கு மாற்றி வேக விடவும்.

வெந்தவுடன் வெளியே எடுத்துக் கிளறி சூடாக சிக்கன் குருமாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: