சிக்கன் ஃப்ரைட் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
உதிர் உதிராக வேகவைத்த பாசுமதி அரிசி - அரை கிலோ
சிக்கன் - 200 கிராம்
கேரட் - 200 கிராம்
முட்டைகோஸ் - 200 கிராம்
குடைமிளகாய் - ஒன்று
பீன்ஸ் - 200 கிராம்
வெங்காயத்தாள் - 100 கிராம்
சோயாசாஸ் - 3 கரண்டி
சில்லிசாஸ் - இரண்டு கரண்டி
மிளகுத்தூள் - ஒரு கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் - இரண்டு கரண்டி
முட்டை - இரண்டு
எண்ணெய் -100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை உதிராக வேக வைத்துக் கொள்ளவும். எல்லா காய்களையும் மெல்லியதாக நறுக்கிவைக்கவும்.
கோழியை சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து சிறியதுண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெய் ஊற்றி கேரட், பீன்ஸ், கோஸ்ஸைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின் கோழி, குடைமிளகாய், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும். அதனுடன் சில்லிசாஸ், சோயாசாஸ், வினிகர் ஊற்றி கிளறி வேகவைத்த சாதத்தை போட்டு எல்லாப்பக்கமும் சேரும்படி நன்றாக கிளறவும். பின் மூடியை போட்டு பத்து நிமிடம் வைக்கவும்
ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றி கொத்திவிட்டு பொரிக்கவும்
சாதம் உள்ள சட்டியை திறந்து மீண்டும் ஒருமுறை கிளறி மேலே பொரித்த முட்டையை தூவி சூடாக பரிமாறவும்.