சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்

சிக்கன் - 100 கிராம்

கேரட் - ஒன்று

பீன்ஸ் - 5

சிவப்பு குடைமிளகாய் - பாதி

பேபி கார்ன் - 2

தக்காளி - ஒன்று

வெள்ளை வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - ஒன்று

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி

மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி

ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி

கருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட். பீன்ஸ் மற்றும் குடைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பேபி கார்னையும்

பச்சை மிளகாயையும் வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாகவும்

வெங்காயத்தை நீளமாகவும் நறுக்கி வைக்கவும். சிக்கனைச் சுத்தம் செய்து சிறிது உப்புச் சேர்த்து வேகவைத்து உதிர்த்துக் வைக்கவும்.

அரிசியைக் களைந்து குக்கரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி 8 விசில் வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன்

வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் காய்கறிகளையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு உதிர்த்து வைத்த சிக்கனைச் சேர்த்து மிளகாய்த் தூள், மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் வதங்கியதும் ஆறவைத்த சாதத்தைச் சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு கிளறிவிட்டு மூடி வைக்கவும். (அடிக்கடி கிளறிவிடவும்). சாதம் நன்கு வதங்கியதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: