சாம்பார் சாதம் (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - கால் கிலோ

முருங்கைக்காய் - 2

சாம்பார் வெங்காயம் - 15

உருளைக்கிழங்கு - 2

காரட் - ஒன்று

பீன்ஸ் - 10

தக்காளி - ஒன்று

புளி - எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிள்காய் - 4

தேங்காய் - அரை மூடி

உலர்ந்த மிளகாய் - 4

சீரகம் - அரைத் தேக்கரண்டி

கடுகு - அரைத் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

தேங்காய், சீரகம், மிளகாய் வற்றைலை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை பிரியாணிக்கு அரிவது போல், துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

பிறகு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கின தக்காளி போட்டு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்களையும் சேர்த்துப் பிரட்டி வேக விடவும்.

அத்துடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.

அரிசியையும் களைந்துப் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதினையும் தேவையான உப்பையும் சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (அரிசி அளவில் இரண்டரை மடங்கு இருக்குமாறு) மூடிவைத்து, சுமார் 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சற்று குழைவாகவே வேக வைத்து எடுக்கலாம்.

குறிப்புகள்: