சாம்பார் சாதம் (3)
தேவையான பொருட்கள்:
----------------------------------------
வேக வைக்க:
------------------------------------------
அரிசி - அரை கிலோ
துவரம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - பத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
-------------------------------------------
காய் வேக வைக்க:
----------------------------------------------
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - பத்து
முள்ளங்கி - 1
முருங்கைக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
பச்சை மிளகாய் - முன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பிட்டு
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி
-------------------------------------
தாளிக்க:
---------------------------------------
எண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
நெய் - 25 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி
செய்முறை:
முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து 4 1/2 டம்ளர் வரும் அப்படியே இரண்டு மடங்காக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முள்ளங்கி, கேரட், பீன்ஸ் சேர்த்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றவும். முருங்கைக்காயை தனியாக வேக வைத்து சேர்க்கவும்.
இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வேக வைத்துள்ள காயை ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளற வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மூடி நெய், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
கமகமன்னு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி
குறிப்புகள்:
வெளியில் ரூர் செல்லும் போது, விசேஷங்களுக்கு இதை செய்யலாம்.
முருங்கைக்காயை முதலே போட்டால் குழைந்து விடும். தனியே கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வேக வைத்து அதை சேர்க்கனும். அப்ப அது முழுசாக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியாக செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவைப்பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.