சாம்பார் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 1/2 கப்
துவரம் பருப்பு - 3/4 கப்
முருங்கைக்காய் - 3
கத்திரிக்காய் - 3
சின்ன வெங்காயம் - சிறிதளவு
புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
------------------------
வறுத்து அரைக்க:
--------------------------
கடலைப்பருப்பு - 1/4 கப்
தனியா (மல்லி) - கால் கப்
மிளகாய் வற்றல் - 7 (காரத்திற்கு ஏற்ப )
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் துருவல் - 1/4 கப் (கொப்பரையாக இருந்தால் நன்றாக இருக்கும்)
----------------------------
தாளிக்க:
----------------------------
கடுகு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி, முந்திரி - அலங்கரிக்க
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா மற்றும் பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக வறுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு நறுக்கின முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும், பொடித்து வைத்துள்ள பொடியை தூவி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
பிறகு வேக வைத்த அரிசி பருப்பு இரண்டையும் இதில் போட்டு நன்கு கிளறவும்.
நன்கு கலந்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். மேலே கொத்தமல்லி தழை மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.