சாம்பார் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமைரவை - அரை கப்

துவரம் பருப்பு - கால் கப்

சின்ன வெங்காயம் - 5 (அ) 6

தக்காளி (சிறியது) - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று விருப்பமான

காய்கறி கலவை - ஒரு கப்

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

புளி - சுண்டைக்காய் அளவு

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மல்லித் தழை - சிறிது

-------------------------

தாளிக்க:

----------------------------

எண்ணெய் (அ) நெய் - 2 தேக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

வெந்தயம் - கால் தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - ஒன்று (அ) 2

கறிவேப்பிலை- சிறிது

பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும். காய்கறிகளை தயாராக வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளி மற்றும் காய்கறி கலவை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.

ஊற வைத்த பருப்பு, கழுவிய கோதுமைரவை சேர்த்து கிளறி இரண்டரை கப் தண்ணீர், புளிக்கரைசல், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து மூடி 5 (அ) 6 விசில் வரும் வரை வேகவிடவும்.

ப்ரஷர் அடங்கியதும் தாளிப்பு பொருட்களை தாளித்து சேர்த்து கிளறவும்.

குறிப்புகள்: