சாதம் சீஸ் உருண்டை
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
சீஸ் - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/2
கார்ன் ஃப்ளார் மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சீஸை கட்டியாக இருந்தால் துருவி கொள்ளவும். (ஸ்லைஸாக இருந்தால் உதிர்த்து கொள்ளவும்).
மசித்த சாதம், உப்பு, சீஸ், கார்ன் ஃப்ளார் மாவு, வெங்காயம், மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
மாலை நேரத்தில், சாஸுடன் சேர்த்து சாப்பிட சுவையான சிற்றுண்டி. இதற்காகவே, அடுத்த நாள், சாதம் மீதி வைக்கத் தோன்றும்.