சவுத் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி (அ) புழுங்கல்அரிசி - அரை டம்ளர்
பெரிய வெங்காயம் - ஒன்று
முட்டை - ஒன்று
கேரட், முட்டை கோஸ் - சம அளவு பொடியாக அரிந்தது அரைகப்
முருங்கை கீரை - கால் கப்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
சோயா சாஸ் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - நான்கு ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதற்க்கேற்ப உப்பை சேர்த்து குக்கரில் வைத்து ஒரு ஸ்டீம் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து ஏழு நிமிடம் கழித்து இறக்கவும்.
ஒரு அகன்ற வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பொடியாக அரிந்த வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு பொடியாக அரிந்து வைத்திருக்கும் கேரட்,கோஸ்,கீறிய பச்சைமிளகாய் இவற்றுடன் அதற்க்கேற்ற உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியவுடன்,மிளகுத்துள் சேர்த்து ஒரு தடவை வதக்கி விட்டு,பின் சோயா சாஸும் ஊற்றி கிளறிய பின்,முட்டை உடைத்து ஊற்றி கிளறவும்.
கொஞ்சம் உதிரியானதும்,முருங்கை இலையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ரெடியாக இருக்கும் சாதத்தை உதிர்த்தாற்ப்போல் போட்டு நன்கு ஒன்று சேர கிளறவும்.
எல்லாம் பக்கமும் ஒன்று கலந்ததும்,விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி தழையை தூவி இறக்கவும்.
சுவையான, சத்தான குழந்தைகளும் விரும்பக்கூடிய சவுத் ஃப்ரைட் ரைஸ் தயார்.
குறிப்புகள்:
இதில் சேர்த்திருக்கும் விஷயங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு சத்தானதாகும். சோயா சாஸ் வீட்டில் இருந்தால் தானே தவிர அவசியம் இல்லை.அது இல்லாமலே சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
இதில் சேர்த்திருக்கும் பொருட்கள் நம் வீட்டில் அன்றாடம் இருப்பவையே...எனவே நினைத்தவுடன் செய்து விடலாம்.