சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1/4 கப்
வெல்லம் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் - 4 என்னம் (நசுக்கியது)
பால் - 1 கப் (காய்ச்சியது)
நெய் - 1/2 கப்
முந்திரி - 10 என்னம்
உலர்ந்த திராட்சை - 10 என்னம்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் விட்டு பாசி பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். உடன் பச்சரிசியை போட்டு ஒரு வதக்கு வதக்கி உடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் குறைந்து கொண்டே வரும் கொதிக்க வைத்த தண்ணீர் வைத்திருந்தால் குறைய குறைய் தண்ணீர் சேர்க்கலாம் அரிசி வேகும் வரை.
வேறு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கையால் தண்ணீர் தெளித்து காய்ச்சவும். தூசிகள் இருந்தால் வந்து விடும். சூடு படுத்தினாலே போதும்.
அரிசி வெந்த சமையத்தில் ஏலக்காய்,காய்ச்சிய பால், 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
நன்றாக குழைந்து வெந்து வரும். அப்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை போட்டு கிளறி மீதியுள்ள நெய் ஊற்றி இறக்கவும் .
குறிப்புகள்:
இது நம் வீட்டில் சமைப்பது. மண்பானை வைத்து சமைத்தால் முதலில் அரிசி, பாசிபருப்பை கழுவி உலை கொதிக்க வைத்து கொதித்த பின் தான் அரிசி,பாசிபருப்பை போடுவோம்.