சம்பா சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னி பச்சரிசி – அரை கிலோ

மிளகு – ஐந்து கிராம்

சீரகம் – ஐந்து கிராம்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரிப்பருப்பு – ஐந்து கிராம்

கறிவேப்பிலை – இரண்டு கொத்து

உப்பு – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்து ஒரு தட்டில் பரவலாகப் போட்டு ஆறியதும் உப்பு சேர்த்து நலெண்ணெயையும் ஊற்றி ஒரு கரண்டிக் காம்பால் லேசாக கிளறி விடவும்.

மிளகு, சீரகத்தை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் வாசனை வர வறுத்து நைசாகப் பொடித்து சாதத்தின் மேல் தூவி மீண்டும் லேசாக பிரட்டி விடவும்.

முந்திரியை சிறிய துண்டுகளாக உடைத்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போட்டு சாதக்கலவையைக் கொட்டி கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: