சப்ஜி ரைஸ்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி அல்லது சீரகசம்பா அரிசி - 2 கப்

முழு பூண்டு - ஒன்று

பச்சைமிளகாய் - 3

கேரட் - 2

முட்டைகோஸ் - ஒரு கப்

முட்டை - 3

பட்டை - 1

ஏலக்காய் - 2

லவங்கம் - 3

பிரிஞ்சி - 1

கறிவேப்பிலை - ஒரு கொத்து

வெங்காயம் - 2

நெய் - 5 தேக்கரண்டி + 2 தேக்கரண்டி + 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

2 தேக்கரண்டி நெய்யில் இரண்டாக நறுக்கிய பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் நீளவாக்கில் நறுக்கிய கேரட் மற்றும் கோஸ், உப்பு சேர்த்து அரைவேக்காடாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் மீண்டும் நெய் விட்டு முட்டை மற்றும் அதற்கு ஏற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.

நிறம் மாறும் வரை நன்கு கிளறி நன்கு வதக்கவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், லவங்கம், பிரிஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் அரைமணி நேரம் ஊற வைத்த அரிசியை நீர் வடித்து விட்டு பாத்திரத்தில் கொட்டி 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் அதற்கு தகுந்த உப்பு சேர்த்து 2 கப் அரிசிக்கு 4 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.

முக்கால் வாசி நீர் வற்றி படத்திலுள்ளது போன்ற பக்குவத்தில் வரவேண்டும். அப்போது காய்கறி மற்றும் முட்டையை சேர்த்து ஒரு சேர கிளறி விடவும்.

பின் மூடியிட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வைத்திருக்கவும்.

குறிப்புகள்:

டொமேட்டோ சாஸ், தேங்காய் துவையல், ரைத்தா, கிரேவி ஆகியவை இதற்கு பொருத்தமாக இருக்கும்.