சன்னா ரைஸ்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சன்னா - 1 கப் (வேக வைத்தது)

பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்

வெங்காயம் - 3

தக்காளி - 2

தயிர் - 1/2 கப்

பிரியாணி மசாலா (அ) புலாவ் மசாலா பொடி - 2 ஸ்பூன்

இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கொத்தமல்லி,புதினா - 1 கைப்பிடி

முந்திரி - 10

நெய் - 2 மேசை கரண்டி

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எலுமிச்சை - 2

செய்முறை:

சன்னாவை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்துக்கொள்ளவும்.

தக்காளியை அரைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

பாத்திரத்தில் நெய் சேர்த்து மிளகாய்,முந்திரி வறுக்கவும்.

பின் அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அதில் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.

பின் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதில் தயிர்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சன்னா சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் தேவையான அளவு தண்ணீர் (4 டம்ளர்),உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்த பின் அரிசியை கொட்டி வேக விடவும்.

தண்ணீர் வற்றும் சமயத்தில் சிறுதீயில் வைத்து 15 நிமிடம் தம்மில் போடவும்.

பின் கீழிறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து மீண்டும் கிளறி மூடிவிட்டு 15 நிமிடத்திற்கு பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்:

சன்னா ஊற வைக்கும் சமயத்தில் 8 முறையாவது தண்ணீரை மாற்றவும். அதனால் வாயு பிரச்சனை நீங்கும். எலுமிச்சை சாறு பிழியும் போது அதிகமாக கசக்கி பிழியாமல் லேசாக பிழிந்து வரும் சாறு மட்டும் உபயோகிக்கவும்.

இதனால் கசப்பு சுவை வராது. வீணாக்க விருப்பமில்லை எனில் மீதி இருக்கும் சாற்றில் ஜூஸ் தயார் செய்யலாம். அல்லது ரைத்தா செய்யும் போது பிழிந்துவிடலாம். தயிர் சேர்ப்பதால் ரைத்தாவில் கசப்பு தெரியாது. விதைகள கண்டிப்பாக சேர்க்க வேண்டாம்.

இதற்கு ரைத்தா, தாளிச்சா நல்ல காம்பினேஷன்.