சட்னி சாதம் (1)
0
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 15 முதல் 20 வரை
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
சிகப்பு மிளகாய் - நான்கு
புளி - சிறிதளவு
கடுகு, உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
நெய், எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம்
பூண்டை தோலுரித்து தயாராக வைக்கவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி சேர்த்து வதக்கவும்.
கலர் மாறி வரும் போது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பாதி அரைபட்டதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்.
எண்ணெயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சட்னியில் கலக்கவும். சூடான சாதத்தில் நெய் கலந்து அரைத்த சட்னி கலந்து பரிமாறவும்.