சட்னி சாதம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சாதம் - ஒரு கப்

நிலக்கடலை - 50 கிராம்

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 2

---------------

தாளிக்க-

-----------------

கடுகு, உளுந்து, கடலைபருப்பு - அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக்கொள்ளவும்

தக்காளி,பச்சை மிளகாய், வெங்காயம் ஆகிய மூன்றையும் கொதிக்கும் நீரில் போட்டு வேக விடவும்

பின் நிலக்கடலையுடன் உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்தததும் சட்னியை சேர்த்து கிளறவும்

பின் சாதத்தை சேர்த்து கிளறி பின் பரிமாறவும்

குறிப்புகள்:

தாளிக்காமல் வெறும் சட்னியில் சாதத்தை பிரட்டியும் சாப்பிடலாம். நீரில் கொதிக்க வைக்கும் போது தேவைக்கு மட்டும் நீர் எடுத்தால் அதே நீரில் அரைக்க ஏதுவாக இருக்கும். அப்பளம்,ஊறுகாய் உடன் சேர்த்து பரிமாறவும்