க்ரீன் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி - ஒரு கப்
புதினா - கால் கப்
கொத்தமல்லி - கால் கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
வெங்காயம் - 2
சின்ன வெங்காய விழுது - கால் கப்
ஏலக்காய் - 2
முந்திரி - 6
பட்டை - 2
கிராம்பு - 3
அன்னாசிபூ - 1
பிரிஞ்சி - 1
பெரிய ஏலக்காய் - 1
மிளகு - 10
சீரகம் - சிறிதளவு
ஜாதிக்காய் பொடி - சிறிதளவு
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்
நெய் - 2 மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
புதினா ,கொத்தமல்லி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைக்கவும்
பாத்திரத்தி நெய் விட்டு வாசனை பொருட்களை போடவும்
அத்துடன் முந்திரி, சீரகம், மிளகு போடவும்
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சின்ன வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பின் க்ரீன் சட்னியை சேர்த்து சுருள வதக்கவும்
பின் சுத்தம் செய்த அரிசியை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்
பாதி நீர் வற்றிய பிறகு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து தம்மில் போடவும்
குறிப்புகள்:
ரைத்தா, மட்டன் கடாய் வறுவல், தாளிச்சா, அவிச்ச முட்டை காம்பினேஷனாக வைக்கலாம்