கோஸ் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 1/2 கப்

பாசிபருப்பு - 1/2 கப்

முட்டைகோஸ் துருவியது - 2 கப்

சாம்பார்த்தூள் - 1 டேபிஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளி - 1

எலுமிச்சை - 1 (விரும்பினால மட்டும்)

கொத்தமல்லிதழை - சிறிது

உப்பு- தேவைக்கு

-------------------------------------------

தாளிக்க:

---------------------------------------------

கட்கு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க

எண்ணை - தாளிக்க

செய்முறை:

வாணலியில் எண்ணை ஊற்றீ கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவும்

பின் வெங்காயத்தை பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்

அதனுடன் தக்காளித்துண்டுகள் போட்டு வதக்கவும்.

பின் முட்டைகோஸ் போட்டு வதக்கவும் அதில் சாம்பார்த்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும்

ரைஸ்குக்கரில் 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் பாசிபருப்பையும், அரிசியையும் போட்டு கொதிக்கவிடவும்

பின் வதக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கலக்கி வேகவிடவும். வெந்து எடுத்ததும் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்

குறிப்புகள்:

ப்ரஷர் குக்கரில் என்றால் இரண்டு விசில் விட்டு நிறுத்தவும்.

கூடுதல் காரம் விரும்பினால் பச்சை மிளகாய் நறுக்கி வதக்கும்போது சேர்க்கலாம்