கோவை அரிசிபருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொன்னி அரிசி - 2 கப்

துவரம்பருப்பு - 3/4 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

கடுகு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை - 2 ஆர்க்கு

குருமிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வரமல்லிவிதை - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 3 எண்ணம்

பூண்டு - 5 பல்

தேங்காய் - 1 கீற்று

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 5 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை,பருப்பு நன்கு கலைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும்.

பூண்டு தோல் உரித்து வைக்கவும்.

தேங்காய் பொடியாக அரிந்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, குருமிளகு, சீரகம், வரமல்லிவிதை, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

இதனுடன் பூண்டு, வெங்காயம்,தேங்காய், தக்காளி சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து களைந்த அரிசி பருப்பு சேர்த்து 3 விசில் விடவும்.

கொத்துமல்லி இழை தூவி கிளறவும்.

குறிப்புகள்:

பொரித்த அப்பளத்துடன் சூடான சாதத்தின் மேல் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட சுவையை அள்ளும்.

சாதம் வைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே போதும் பருப்புக்கு என்று தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை