கோவில் புளியோதரை (1)
தேவையான பொருட்கள்:
புளி - ஒரு ஆரஞ்சு அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
--------------------------
வறுத்துப் பொடிக்க:
------------------------
காய்ந்த மிளகாய் - 5
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
எள் - 1 மேசைக்கரண்டி.
-------------------
தாளிக்க:
-----------
கடுகு - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 1கைப்பிடி
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 7
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.
------------------------
சாதம் கலக்க:
------------------
சாதம் - 4 கப்
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.
செய்முறை:
புளியை 2 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து நைசாக பொடித்து வைக்கவும் (எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுக்கவும்).
மிளகாயை கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து சிவந்ததும், வேர்க்கடலை சேர்த்து பிரட்டி கறிவேப்பிலை சேர்க்கவும்.
கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளி பச்சை வாசனை போய், நன்கு கொதித்து கெட்டியானதும் பொட்த்த பொடியில் முக்கால் பாகம் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
சாதத்தை உதிர் உதிராக வடித்து நல்லெண்னெய் கலந்து ஆற வைக்கவும். நன்கு ஆறியபின், புளிக்காய்ச்சல், மீதியுள்ள பொடி சேர்த்து நன்கு சாதம் உடையாமல் கலந்து அமுக்கி வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
புளி ரொம்ப எரிப்பான புளியாக இருந்தால், ஒரு கொட்டைப் பாக்களவு வெல்லம் சேர்த்தால், புளியின் எரிப்பு இருக்காது. புளிக்காய்ச்சல் அதிகம் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து கொள்ளலாம். எண்ணெய் மிதக்கும் அளவு கொதிக்க வைத்து வைத்துக் கொண்டால், 15,20 நாளூக்குக்கூட கெடாது. ஃபிரிஜ்ஜில் வைத்தால் மாதக்கணக்கில் இருக்கும். மசக்கை இருப்பவர்கள் புளிக்காய்ச்சல் செய்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது கலந்து சாப்பிடலாம்.