கோவில் புளியோதரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு ஆரஞ்சு அளவு

மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

-----------------------------

வறுத்துப் பொடிக்க

----------------------------:

காய்ந்த மிளகாய் – 5

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

தனியா - 2 தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

எள் - ஒரு மேசைக்கரண்டி

----------------------

தாளிக்க:

-----------------------

கடுகு - ஒரு தேக்கரண்டி

கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி

வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

பெருங்காயம் – சிறிது

காய்ந்த மிளகாய் – 7

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

சாதம் கலக்க: சாதம் - 4 கப்

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை:

வறுக்க தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். சாதத்தை வடித்து எண்ணெய் கலந்து வைக்கவும்.

எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும். எள்ளை வாணலியில் போட்டு சடசடவென பொரிந்ததும் எடுக்கவும்.

அரைத்த அனைத்தையும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

புளியை 2 கப் நீர் விட்டு ஊற வைக்கவும். தாளிக்க தேவையானதை எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு சேர்க்கவும்.

பருப்பு சிவந்ததும் வேர்கடலை சேர்த்து பிரட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

இதில் கரைத்த புளியை வடிக்கட்டி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து புளி வாசம் போய் சற்று கெட்டி ஆக ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் முக்கால் பாகத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் புளிக்காய்ச்சல் மீதம் உள்ள பொடி சேர்த்து நன்றாக கலந்து அழுத்தி வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: