கோவில் எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் - 2 கப்
எலுமிச்சை - 3
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடலை பருப்பு - 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கேரட் - ஒன்று
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் கடலை பருப்பு சேர்த்து தீய விடாமல் வறுக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
எலுமிச்சையை பிழிந்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தாளித்தவற்றுடன் சேர்க்கவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் சிறு தீயில் வைத்து கொதிக்க விடவும்.
அதனுடன் கேரட்டை துருவி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். கேரட்டை வேக வைக்க வேண்டாம்.
இந்த கலவையில் உதிர் உதிராக வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கோவிலில் கொடுக்க கூடிய எலுமிச்சை சாதம் தயார்.