கோலா புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கைமா - 800 கிராம்

அரிசி - 800 கிராம்

நெய் - 800 கிராம்

சீரகம், கருமிளகு - சிறிது

பட்டை - சிறிது

பெரிய வெங்காயம் - 200 கிராம்

ஏலம் - சிறிது

இஞ்சி - 25 கிராம்

தக்காளி - 100 கிராம்

கசகசா - 4 தேக்கரண்டி

பூண்டு - 3

காய்ந்தமிளகாய் - 10

உப்பு - சிறிது

செய்முறை:

முதலில் கைமாவில் சீரகம், கருமிளகு, பட்டை, கிராம்பு, ஏலம், இஞ்சி, வெங்காயம், கசகசா, உப்பு கொஞ்சம் இவையெல்லாம் போட்டு நன்றாக அரைத்து கோலா தயாரித்துக் கொள்ளவும்.

நெய்யில் கால் அளவு வெங்காயத் துண்டுகளைப் போட்டு தாளித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டு, இஞ்சி, வறுத்த மல்லி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

நெய்யில் கோலாக்களைப் போட்டுப் பொரிக்கவும். பிறகு அதில் தயிர் தெளிக்கவும்.

பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். தாளித்து வைத்திருந்த வெங்காயத்தையும் ஏலம் 5, கிராம்பு 5, கருமிளகு 10 ஆகியவற்றையும் அரைத்து கோலாவில் போட்டு புரட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை உலையில் போட்டு பட்டை 3, கிராம்பு 5, ஏலம் 5, உப்பு கொஞ்சம் போட்டு வேக விடவும்.

அரிசி ஓரளவு வெந்ததும் மற்றொரு பாத்திரத்தில் சோற்றை பாதி அளவு போட்டு பரப்பி அதன்மீது போட்டு பன்னீர் தெளிக்கவும்.

பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேலும், கீழும் நெருப்புப் போடவும். அரிசி வேகவில்லை என்றால் கொஞ்சம் பால் தெளிக்கவும்.

குறிப்புகள்: