கோப்தா ரைஸ்
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 1/4 கிலோ
கடலை மாவு - 1/4 கப் (வறுத்தது)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க தகுந்த அளவு
-----------------------------
அரைத்தெடுக்க-
----------------------------
வெங்காயம் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 5
பட்டை - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
--------------------------------------
ப்ரைட்ரைஸ் செய்ய:-
-----------------------------------------
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சாதம் - 2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி - ஒருதுண்டு (துருவியது)
பூடு - 8 பல் (பொடியாய் நறுக்கியது)
வெள்ளை மிளகு தூள் - அரைஸ்பூன்
கேரட் - கால் (நீளவாக்கில் நறுக்கியது)
கோஸ் - அரை கப்
செய்முறை:
கைமாவை மிக்ஸியில் மீண்டும் ஒரு முறை அடித்து உப்பு, அரைத்த விழுது, கடலை மாவு சேர்த்து கெட்டியாக பினைந்துக்கொள்ளவும்.
கடைசியில் கொத்தமல்லியும் பச்சை மிளகாயும் கலந்து பின் உருண்டைகளாக உருட்டி சிறுதீயில் பொரித்தெடுக்கவும். கோப்தா தயார்.
எண்ணெயில் கறிவேப்பிலை,வெங்காயம் தாளித்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
பின்னர் கேரட் கோஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கியதும் உதிர்த்து வைத்துள்ள கோப்தாவை சேர்க்கவும்.
பின் சாதம் மற்றும் வெள்ளை மிளகுதூள் சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும்
குறிப்புகள்:
கோப்தாவை உதிர்த்தாமல் அப்படியே சேர்த்தும் செய்யலாம்.
தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. தேவைபடுவோர் சிப்ஸ்,பருப்புதுவையல்,ரைத்தா உடன் பரிமாறலாம்