கோதுமை ரவை தயிர்சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

தயிர் - 1/4 கப்

பால் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

---------------------------

தாளிக்க:

-------------------------------

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

இஞ்சி - 1/2 இன்ச் துண்டு (பொடியாக வெட்டியது)

பச்சைமிளகாய் - 1 (பொடியாக வெட்டியது)

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 மேசைக்கரண்டி

பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

மல்லிக்கீரை - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

கோதுமை ரவையை சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து குக்கரில் 4விசில் வேக வைக்கவும்

தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேக வைத்த ரவையை சேர்க்கவும். ஒரு முறை கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

தயிரும் காய்ச்சி ஆறிய பாலும் தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்:

தயிரின் புளிப்புக்கேற்ப அளவை கூட்டவோகுறைக்கவோ செய்யவும்.

காலையில் செய்து மதியம் லஞ்சுக்கு எடுத்து செல்வதாக இருந்தால் அரை கப் பாலும் 1தேக்கரண்டி தயிரும் சேர்த்து கிளறவும். சாப்பிடும் போது சரியான அளவில் புளித்திருக்கும். சற்று தளர்வாக கிள்றினால்தான் ஆறும் போது சரியாக இருக்கும். இல்லையென்றால் கெட்டியாகிவிடும்.