கோதுமை ரவை சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 7
கத்திரிக்காய் - 1
தக்காளி - 1
கேரட் - 1/2
முருங்கைக்காய் - 1/2
சௌசௌ - 1/2
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 இனுக்கு
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
பெருங்காய பொடி - 1/2 தேக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
மல்லிக்கீரை - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
-----------------------------
தாளிக்க:
-----------------------------------
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - 1 இனுக்கு
செய்முறை:
துவரம்பருப்பை கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக்கவும்.
ரவையை தண்ணீரில் களைந்து அதனுடன் வெட்டிய காய்கள் வெங்காயம் கறிவேப்பிலை சாம்பார்பொடி, பெருங்காய பொடி சேர்க்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
வேக வைத்த பருப்பையும் சேர்த்து மேலும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும்.(பருப்பு வேக வைத்த நீர் இருந்தால் அதையே சேர்க்கவும்)
உப்பு சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்க்கவும்
குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.
பிரஷர் அடங்கியதும் திறந்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
மல்லிக்கீரை சேர்த்து கிளறி தேவைப்பட்டால் மேலே அரைத்தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
சூடாக பரிமாறவும்
குறிப்புகள்:
சற்று தளர்வாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். குக்கரை திறந்த பின் தண்ணீர் அதிகம் போல் தோன்றினால் தாளித்ததும் அதே வாணலியில் இட்டு சற்று கிளறினால் இறுகி விடும்