கோதுமை சோறு
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை - 2 கப்
காய்கறி கலவை - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 + 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 + 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் - அரை கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
தக்காளி பியூரி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, மல்லித் தழை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமையை களைந்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம்
தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது, சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி பியூரி மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு புதினா, மல்லித் தழை, உப்பு சேர்த்து, காய்கறி கலவையை சேர்க்கவும். நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி கோதுமையை சேர்க்கவும். நன்கு கிளறிவிட்டு 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.