கொள்ளு ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
முளைக் கட்டிய கொள்ளு - அரை கப்
முட்டைக்கோஸ் துருவல் - அரை கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
குடைமிளகாய் - கால் பாகம்
பெங்களூர் தக்காளி - 2
வெங்காயத் தாள் - 2
ப்ரோக்கோலி - கால் பாகம்
பச்சை மிளகாய் - ஒன்று இஞ்சி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - அரை மேசைக்கரண்டி
சாஜீரா (கருஞ்சீரகம்) - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் களைந்து உதிரியாக சாதத்தை வேக வைத்து எடுத்து கால் தேக்கரண்டி எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
கொள்ளைக் கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஓவனில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். (அல்லது அடுப்பில் வைத்து குழையாமல் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்).
ப்ரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வெந்நீரில் போட்டு வடித்து வைக்கவும்.
குடைமிளகாய், வெங்காயம், வெங்காயத் தாள் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டு மூன்றாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கருஞ்சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த கொள்ளு சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி சாதத்தைச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து மிதமான தணலில் 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். அவ்வப்போது கிளறிவிடவும். காய்கள் மற்றும் தூள் வகைகளுடன் சாதம் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
சத்தான சுவையான கொள்ளு ஃப்ரைடு ரைஸ் ரெடி.