கொத்தமல்லி புலாவ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 250 கிராம்
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
காரட் - 2
வெங்காயம் - 3
பீன்ஸ் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
மராத்தி மொக்கு - 2
கற்பாசி - சிறிதளவு
பிரிஞ்சி இலை - சிறிதளவு
தேங்காய் - கால் மூடி
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 மேசைக்கரண்டி அல்லது நெய்
செய்முறை:
முதலில் வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு மராத்தி மொக்கு, கற்பாசி, பிரிஞ்சி இலை இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பூண்டு பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
மல்லிதழை, தேங்காய் துருவல் மற்றும் வறுத்து எடுத்து கொண்ட பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அரிசியை இளஞ்சூடு வரும் வரை வறுக்கவும்.
அரிசிக்கு வேண்டிய தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கியதும் காரட், பீன்ஸ் இவற்றை போட்டு லேசாக வதக்கி அரைத்த கலவையையும் இத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அரிசியை களைந்து கொதித்த வெந்நீரை ஊற்றி வதக்கிய மசாலவையும் அரிசியில் போட்டு சேர்த்து ஒன்றாக குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் நிறுத்திவிட வேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்து உப்பு சேர்த்து, சிறிது நெய் விட்டு ஒன்று போல் கிளறவும்.