கொத்தமல்லி சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி (மெல்லிய ரகம்) - ஒரு கப்

உப்பு - தேவையான அளவு

--------------------------------

விழுதாக அரைக்க:

---------------------------------

சுத்தம் செய்து நறுக்கின மல்லித் தழை - 2 கப்

பச்சை மிளகாய் - 5 அல்லது 6 ( ருசிக்குத் தக்க)

புளி - சுண்டைக்காய் அளவு

---------------------

தாளிக்க:

------------------------

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 மேசைக் கரண்டி

---------------------------

அலங்கரிக்க:

---------------------------

வறுத்த வேர்க்கடலை- கால் கப்

தேங்காய் துருவல் - சிறிதளவு

செய்முறை:

சாதத்தைப் பொலபொலவென்று வடித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.

மேலே அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைச் சேர்த்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, விழுதை பச்சை வாசனை போக கிளறவும்.

பிறகு அதை ஆறின சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

வறுத்த வேர்க்கடலையும் தேங்காய் துருவலும் மேலே தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள்:

உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பின் வடிகட்டி, துணியில் பரப்பி வைத்து தாளிக்கும் போது வறுத்தால், மிகக் கரகரப்பாக இருக்கும்.