கொத்தமல்லி சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப்

கொத்தமல்லித் தழை - அரை கட்டு

புதினா - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

கடுகு, சீரகம் - தாளிக்க

உளுந்து, கடலை பருப்பு, முந்திரி, வேர்க்கடலை - தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவைக்கு ஏற்ப எண்ணெய்

நெய் - தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - சிறிதளவு

ஆல் பர்பஸ் பொடி - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து வதக்கவும்.

ஆறியதும் புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

சாதத்தில் சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பருப்புகள் சேர்த்து தாளிக்கவும்.

அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட விடவும். எண்ணெய் மிதந்து வரும்போது ஆல் பர்பஸ் பொடி கலந்து வைக்கவும்.

அடுப்பை சிறுதீயில் வைத்து ஆற வைத்த சாதம் தூவி கிளறவும்.

குறிப்புகள்: