கொண்டைக்கடலை புலவு
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை - 1/2 கப்
புதினா - சிறிதளவு
பட்டை - 1 அங்குலத்துண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் கழுவி தகுந்த அளவு தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு பின் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி ஈரம் போகும் வரை வறுக்கவும்.
கடலையை 7 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
தக்காளி, கொத்தமல்லி இலை,பச்சைமிளகாய், புதினா சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை போடவும்.
பின் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின் வெங்காயம், மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அரைத்த விழுது, கரம்மசாலா தூள் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு 1 1/2 கப் தண்ணீர், வேகவைத்த கடலை சேர்க்கவும்.
கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த அரிசி, உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அனலைக் குறைத்து 20 நிமிடங்கள் மூடிப்போட்டு வேகவைக்கவும்.