கேரட் லெமன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - ஒரு பெளல்

எலுமிச்சை - ஒன்று (பெரியது)

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

கேரட் - ஒன்று (பெரியது)

கடுகு, சீரகம் உளுந்து, கடலைப்பருப்பு, எண்ணெய் - தாளிக்க

மஞ்சள் தூள் - சிறிது

பெருங்காயம் - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். அதில் கால் கப் தண்ணீர் விட்டு கலந்து வைக்கவும்.

பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்

கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் பெருங்காயம், பச்சை மிளகாய்m கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதில் துருவிய கேரட் சேர்த்து பிரட்டி 2 நிமிடம் மூடி வைக்கவும்.

கேரட் துருவலுடன் எலுமிச்சை கலவை மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்க விடவும்.

மஞ்சள் தூள் வாசம் போனதும் எடுத்து சாதத்தில் சேர்த்து கலந்து விடவும்.

அரை மணி நேரம் சாதம் ஊறிய பின்னர் பரிமாறவும். சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.

குறிப்புகள்: