கேரட் மசாலா ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

கேரட் - 3

வெங்காயம் - 1

வறுத்த வேர்க்கடலை - 2 தேக்கரண்டி

பட்டை - 1 சின்ன துண்டு

க்ராம்பு - 1

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப்ப

நெய் - 1 தேக்கரண்டி

--------------

மசாலா

---------

கொத்தமல்லி - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வர மிளகாய் - 3

கொப்பரை தேங்காய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு மசாலா சாமன்களை போட்டு நல்ல ப்ரவுன் கலர் வரும் வரை வறுத்து பொடி செய்யவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கொதிக்கும் தண்ணிரில் கேரட்டை தோல் சீவி முழுதாக போட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சூடு ஆறியபின் கேரட்டை துறுவியில் துறுவவும்.

அரிசியை நன்றாக உதிரியாக வேகவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, க்ராம்பு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு

துறுவிய கேரட் போட்டு நன்றாக கலந்து பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும்.

சாதத்தை போட்டு உப்பு, கொஞ்சம் நெய், மாசலா தூள், வறுத்த வேர்க்கடலை தூள் எல்லாம் போட்டு நன்றாக கலந்து

கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இதில் பச்சை பட்டாணி,பூண்டும் சேர்க்கலாம்.

குறிப்புகள்:

பாஸ்மதி அரிசியில் செய்தால் நன்றாக இருக்கும்.