கேரட் பட்டாணி ரைஸ்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - அரைக் கிலோ

கேரட் - 4

பட்டாணி - 100 கிராம்

முட்டை - 2

சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கேரட்

பட்டாணியை போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெந்த கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பட்டாணியை தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அரிசியை உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கொத்தி விட்டு பொரிக்கவும்.

முட்டை நன்கு பொரிந்ததும் அதில் கேரட், பட்டாணியை போட்டு கிளறவும்.

பின்னர் கேரட், முட்டை கலவையில் சாதத்தைப் போட்டு கிளறவும்.

சாதத்தை சேர்த்து நன்கு கிளறியவுடன் சோயா சாஸ் ஊற்றி மிளகுத் தூள் மற்றும் உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: