கேரட் சாதம் (2)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
கேரட் துருவல் - 1 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
வறுத்த நிலக்கடலை - 1/4 கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டி பரத்தி ஆறவிடவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் ஆகியவற்றை கொதிக்கவிடவும்.
இதில் கடலைப் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, கேரட் துருவலை அதில் கொட்டிக் கலந்து வதக்கவும்.
இக்கலவையை வெந்த சாதத்தில் நன்கு கலக்கவும்.
வறுத்த நிலக்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து சாதத்தில் மேலாகத் தூவவும்.
கொத்தமல்லித் தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.