கேரட் சாதம் (1)
0
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
துருவிய கேரட் -1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு பட்டை,கிராம்பு,ஏலக்காய் தாளித்து வெங்காயம், மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி கேரட் போட்டு வதக்கவும்.
உப்பு போட்டு கேரட் வெந்தவுடன் சாதம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
குழந்தைகளுக்கு மதிய சாப்பாட்டிற்கு கொடுத்துவிட, ஒரு சத்தான உணவு.