கேரட் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - இருவருக்கான அளவு

பெரிய கேரட் - 3

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2

தேங்காய் துருவல் - 3/4 கப்

பச்சைமிளகாய் - 2 அல்லது 3

தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்

கடுகு - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கேரட்டை துருவிக் கொள்ளவும். தேங்காயையும், பச்சை மிளகாயையும் தண்ணீரில்லாமல் அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் கேரட்டை கொட்டி உப்பு அரை ஸ்பூன் சேர்த்து கிளறி 3 நிமிடம் குறைந்த தீயில் இடையில் ஒரு முறை கிளறி விட எளிதில் வெந்து விடும்.

பின் அரைத்த தேங்காயை கேரட்டுடன் கொட்டி ஒரு கிளறு கிளறி இறக்கவும். அதனுடன் சாதத்தை கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

3 நிமிடத்தில் இந்த சாதத்தை தயாரித்து விடலாம். ஆனால் சுவை அருமையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம்.

இதனுடன் ஏதாவது வறுவல், வடகம் இருந்தால் நன்றாக இருக்கும்