கேப்ஸிகம் ரைஸ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - ஒரு கப்

கேப்ஸிகம் - ஒன்று

முந்திரி - சிறிது

உப்பு - தேவையான அளவு

----------------

தாளிக்க:

--------------

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்து - அரை தேக்கரண்டி

கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

---------------------------

வறுத்து பொடிக்க:

------------------------

மிளகாய் வற்றல் - 5

தனியா - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

உளுந்து - 1 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி

பட்டை - 1” துண்டு

வேர்கடலை - சிறிது

செய்முறை:

அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும். வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 2 - 4 நிமிடம் வதக்கவும்.

இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும். சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.

வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

குறிப்புகள்: