கேப்ஸிகம் ரைஸ்
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 2
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
எண்ணெய் (அல்லது) நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குடைமிளகாயை விதைகளை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை 2 டம்ளர் தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை போட்டு நன்றாக வறுத்தெடுக்கவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய்m கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வறுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு சற்று கொரக்கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
குடைமிளகாய் பாதி வெந்ததும் அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து கிளறி வேகவிடவும்.
பிறகு தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
சிப்ஸ் அல்லது ஏதேனும் வறுவலுடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.